ஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

ஒசூர் அருகே பைரமங்கலத்தில் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொய்சால மன்னன் வீர ராமநாதனின் ஆட்சி குறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒசூர் அருகே பைரமங்கலத்தில் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொய்சால மன்னன் வீர ராமநாதனின் ஆட்சி குறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறம் கிருஷ்ணன் தலைமையில் வரலாற்று ஆய்வாளர் வீரராகவன், பிரியன்,மஞ்சுநாத் ஆகியோர் களஆய்வில் மேற்கொண்ட போது இந்த கல்வெட்டை சனிக்கிழமை கண்டெடுத்தனர்.
அதிக நடுகற்கலைக் கொண்டது தருமபுரி ,கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இதில் ஒசூரைச் சுற்றியுள்ள குடிசெட்லு,கொத்தூர், சின்னகொத்தூர், தேர்பேட்டை, உளிவீரனள்ளி, கெலமங்கலம், பைரமங்கலம், பாராந்தூர், தளி, அஞ்செட்டி போன்ற இடங்களில் 25- க்கும் மேற்பட்ட நடுகல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாரந்தூரில் பாம்புகடித்து இறந்து போனதற்காக வைக்கப்பட்டுள்ள நடுகல், தேர்பேட்டையில் இருக்கும் யானை குத்தப்பட்டான் கல், பஸ்தியில் இருக்கும் புலிகுத்தப்பட்டான் கல், சின்னகொத்தூரில் இருக்கும் குதிரை குத்தப்பட்டான் கல்,கொத்தூரிலும், கெலமங்கலத்திலும் இருக்கும் குறும்பர் இன நடுகற்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.
கர்நாடகத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர் ஹொய்சால மன்னன் சோமேஸ்வரன் (கி.பி 1223-1267). இவருக்கு இரண்டு மகன்களில் வீர ராமநாதன்.(கி.பி.1254-1295) தமிழகப் பகுதியை ஆட்சி செய்தான்.
திருச்சி மற்றும் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள குந்தாணியை (இப்போது சின்னகொத்தூர்)தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். சோழர்களிடம் குறுநில மன்னனாக ஆட்சி செய்தாளும் மிகப்பெரிய நிலப்பரப்பை வைத்திருந்தார்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முழுவதுமே இவரது கல்வெட்டுகள் நிறைந்திருக்கிறது.
அவரது 31-ஆவது ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டதுதான் இந்த கல்வெட்டு. இந்த நடுகல்லின் சிறப்பு அம்சம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. புலியுடன் சண்டையிட்டு அதனை கொன்றுவிட்டு தானும் இறந்துவிடுகிறார். அப்படி இறந்த வீரன் நேரடியாக சொர்க்கம் செல்வதாகவும் அவரை தேவலோக பெண்கள் வரவேற்று அழைத்து செல்லும் காட்சிகள் கீழ் பகுதியிலும், மேல் பகுதியிலும் செதுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com