செங்கோட்டை வரை நீட்டிப்பு: சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணை

சென்னை எழும்பூரிலிருந்து மானாமதுரை வரை வாரமிருமுறை சென்று வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 4 ஆம் தேதி முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான புதிய கால அட்டவணை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து மானாமதுரை வரை வாரமிருமுறை சென்று வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 4 ஆம் தேதி முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான புதிய கால அட்டவணை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ரயில் எழும்பூர் முதல் செங்கோட்டை வரை புதன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.
எழும்பூரில் இரவு 8.20 மணிக்கு புறப்படுகிறது. தாம்பரம் 8.49, செங்கல்பட்டு 9.18, மேல்மருவத்தூர் 9.49, விழுப்புரம் 10.55, விருத்தாசலம் 11.38, திருச்சி 2.05, புதுக்கோட்டை 2.59, செட்டிநாடு 3.34, காரைக்குடி 3.55, தேவகோட்டை 4.06, சிவகங்கை 4.34, மானாமதுரை 5.30, நரிக்குடி 6.02, திருச்சுழி 6.14, அருப்புக்கோட்டை 6.27, விருதுநகர் 6.55, திருத்தங்கல் இரவு 7.14, சிவகாசி 7.19, ஸ்ரீவில்லிபுத்தூர் 7.35, ராஜபாளையம் 7.49, சங்கரன்கோவில் 8.13, பம்பாகோவில் சந்தை 8.27, கடையநல்லூர் 8.40, தென்காசி 9.00, செங்கோட்டைக்கு மறுநாள் காலை 10.20 மணிக்குச் சென்றடையும்.
அதேபோல், இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து எழும்பூருக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது.
செங்கோட்டையிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, தென்காசி 4.12, கடையநல்லூர் 4.29, பம்பாகோவில் சந்தை 4.42, சங்கரன்கோவில் 4.56, ராஜபாளையம் 5.20, ஸ்ரீவில்லிபுத்தூர் 5.35, சிவகாசி 5.53, திருத்தங்கல் 5.59, விருதுநகர் 6.20, அருப்புக்கோட்டை 6.49, திருச்சுழி 7.02, நரிக்குடி 7.15, மானாமதுரை 8.05, சிவகங்கை 8.38, தேவகோட்டை ரோடு 9.09, காரைக்குடி 9.25, செட்டிநாடு 9.44, புதுக்கோட்டை 10.08, திருச்சி 11.40, விருத்தாசலம் 1.33, விழுப்புரம் 2.25, மேல்மருத்தூர் 3.29, செங்கல்பட்டு 4.08, தாம்பரம் 4.39, மாம்பலம் 4.59, எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்குச் சென்றடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com