நாகையில் நாளை வேளாண்மை கண்காட்சி

நாகப்பட்டினத்தில் வேளாண்மை கண்காட்சி செவ்வாய்க்கிழமை (ஆக.29) நடைபெற உள்ளது.

நாகப்பட்டினத்தில் வேளாண்மை கண்காட்சி செவ்வாய்க்கிழமை (ஆக.29) நடைபெற உள்ளது.
நாகை மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் விழிப்புணர்வு பெருவிழா மற்றும் வேளாண்மை கண்காட்சி செவ்வாய்க்கிழமை (ஆக.29) நடைபெறுகிறது.
நாகை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்கும் இந்த கண்காட்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை வணிகத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
விவசாய வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் வகையில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமிய இளைஞர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ப. காமராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com