தஞ்சாவூரில் கருட சேவை விழாவைத் தொடர்ந்து, 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை சார்பில் 83 ஆம் ஆண்டு கருட சேவைப் பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் புதன்கிழமை தொடங்கியது. வியாழக்கிழமை 24 கருட சேவை விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, 15 பெருமாள் கோயில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிகுன்னப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவக் கண்ணன், கீழ வீதி வரதராஜப் பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமிப் பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய கோயில்களிலிருந்து வெள்ளிக்கிழமை காலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
இதையடுத்து, அந்தந்த கோயில்களிலிருந்து கொடிமரத்து மூலைக்குச் சென்றடைந்து, பின்னர், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகளில் சுவாமிகள் வலம் செல்லும் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாள்களை வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாசில் ஜோசஃப் நடித்த அதிரடி ஓடிடி தேதி!
குஜராத், டாமனுக்கு ரூ. 21,700 கோடி வளர்ச்சித் திட்டங்கள்! தொக்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இன்றைய செய்திகள் ஜூன் 4 - நேரலை!

இந்தியா கூட்டணியில் திமுக இல்லை: டி.கே.எஸ். இளங்கோவன்
விடியோக்கள்
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK


