விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மீண்டும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கும் உடனடியாக ஓய்வூதிய ஆணை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவதாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவித்தது.
அதன்படி புதன்கிழமை வட்டத்தலைவர் சி.ராஜா தலைமையில் சங்கத்தினர் திரளானோர் பாலக்கரையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.துரைராஜ், செயலர் எம்.பி.தண்டபாணி, துணைத் தலைவர் ஏ.நாகராஜ், வட்டச் செயலர் எம்.கொளஞ்சிநாதன், பொருளர் எஸ்.ஜோதி, நிர்வாகிகள் டி.கங்காதரன், ஜி.தண்ணிமலை, ஜி.வேலன், ஆர்.ராஜாமணி, மாயவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.