தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா

விக்கிரவாண்டி அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் மும்மதத்தினரும் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

Published On :

விக்கிரவாண்டி அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் மும்மதத்தினரும் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விக்கிரவண்டி அருகே ஒரத்தூர் கிராமத்தில் சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம் உள்ளது. இங்கு, பொங்கல் விழாவையொட்டி இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் இணைந்து சமத்துவப் பொங்கல் விழா நடத்தினர்.
 அருள்தந்தை சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், உலக அமைதி வேண்டியும், அனைவருக்கும் அனைத்து செல்வங்களும் கிடைக்க வேண்டியும், நாட்டுத் தலைவர்களுக்காகவும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் திருவிருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து சமத்துவப் பொங்கல் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழாவில் செயலர் சேகர், பொருளர் சாமிதாஸ், குருசேகர செயலர் விக்டர்ஜெப தேவகுமார், குருசேகர பொருளர் பாபு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் திரளானோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.