கன்னி - தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2017

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் தெய்வ பலத்தால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள்.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான்.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான்.
Updated on
2 min read

கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)


இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் தெய்வ பலத்தால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். மனதில் தெளிவுடன் கவனமாகவும் பொறுமையுடனும் பொறுப்புடனும் செயல்படுவீர்கள். வருமானம் சீராக இருந்தாலும் செலவுகளும் இருக்கும். சேமிப்புகளில் ஈடுபட முடியாது. கூட இருந்த நண்பர் களால் ஏமாற்றப்பட்ட நீங்கள் அவர்களைப் புரிந்து கொண்டு விலகி விடுவீர்கள். உண்மை உங்கள் பக்கம் இருந்தாலும் சில நேரங்களில் விட்டுக்கொடுத்து சென்று சச்சரவுகளை தவிர்த்து விடுவீர்கள்.

உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கும் தக்க அறிவுரைகளை வழங்குவீர்கள். முக்கியஸ்தர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரக் காண்பீர்கள். புதிய பொறுப்புகள் தேடிவரும். புதிய சூழலில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். செய்தொழில் சீராக நடந்தாலும் முயற்சியில் சிறுசிறு தடைகள் ஏற்படலாம். இதை பொருட்படுத்தாமல் உங்கள் கடமைகளில் கருத்தாக இருந்து வெற்றி பெறுவீர்கள். நண்பர்களிடமிருந்தும் உதவிகளைப் பெறுவீர்கள். முக்கிய விஷயங்களில் அவர்களை கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பீர்கள். மற்றபடி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோருக்கு நெடு நாளாக இருந்த உடலுபாதைகள் மறையும். புதிய உடற்பயிற்சிகளையும் கற்றுக் கொள்வீர்கள். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களையும் தவணை முறையில் வாங்குவீர்கள்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பாராத உயர்வு உண்டாகும். அரசாங்க வழியிலும் உதவிகளைப் பெறுவீர்கள். வாராக்கடன் என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைத்து உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலர் புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்வார்கள். சொத்து சம்பாத்தியம் உயரும். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள். எதிரிகளின் பலம் குறையும். சமூகத்தில் உங்கள் பெயர், செல்வாக்கு உயரும். பேச்சு கணீரென்று ஒலிக்கும். எதிர்பாராமல் காரியங்கள் மடமடவென்று நடந்தேறும். குடும்ப பொறுப்புகளை தனியாக ஏற்று வெற்றிகரமாக நடத்தும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். மற்றபடி அலுலக வேலை விஷயமாக சிறு பயணங்களைச் செய்வீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெற்று மகிழ்வீர்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைத் தங்கு தடையின்றி முடிப்பார்கள். சமுதாயத்தில் உங்கள் நிலைமை உயரும். புதிய பொருள்களை வியாபாரம் செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். சொந்தமான புதிய இடத்திற்கு வியாபாரத்தை மாற்றி அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடக்காண்பீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். பூச்சிக்கொல்லிக்கான செலவுகள் குறையும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களையும் பயிர் செய்வீர்கள். உங்களுக்குக்கீழ் பணிபுரியும் விவசாயப் பணியாளர்களை அரவணைத்துச் செல்வீர்கள். மேலும் புதிய நிலங்களை வாங்க வேண்டாம். நீர்ப்பாசன வசதிகளுக்கும் சிறிது செலவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் பிற்போக்கான நிலையிலிருந்து விடுபட்டு முன்னேற்றங்களை அடைவார்கள். பல வழிகளிலும் முன்னேறுவீர்கள். வருமானம் இரட்டிப்பாக இருப்பதால் தொண்டர்களுக்கும் சிறிது உதவி செய்து மகிழ்வீர்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் செயல்களை தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். வேலைகளை கவனமாக முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும் ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு உந்து சக்தியாகவே அமையும். பெண்மணிகள் இந்த ஆண்டு மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். கணவரின் அன்பும் பாசமும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்பாகவே தொடரும். மாணவ மணிகள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை உடனுக்குடன் படித்து மனதில் நிறுத்திக் கொள்வீர்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com