ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துலாம் - தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2017

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடம் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்வார்கள்

News image
Updated On :7 ஏப்ரல் 2017, 9:52 am

DIN

துலாம்
(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் திடீர் சொத்துச் சேர்க்கை உண்டாகும். செய்தொழிலில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். அலைந்து திரிந்து   காரியங்களைச் செய்வீர்கள். வாய்ப்புகள் கைநழுவிப் போகாமல் பார்த்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் பணப்பற்றாக்குறை வராது. குறுக்கு வழிகளிலும் வருமானம் வரும். உங்கள் செயல்களை வேகமாகச் செய்தாலும் விவேகத்துடன் பணியாற்றுவீர்கள். எதிரிகள் தலைதூக்கினால் தலையில் தட்டி உட்கார வைத்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகவே அமையும். மேலும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றையும் செய்வீர்கள். குழந்தைகளும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்வார்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். எவருக்கும் இந்த காலகட்டத்தில் வாக்கு கொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ கூடாது. உங்கள் பெயரில் பணம் வாங்கியும் கொடுக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கை வளர்ச்சிப் பாதையில் செல்ல எத்தனிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் நீண்டகால திட்டங்கள் நிறைவேறக் காண்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பீர்கள். உங்களின் முயற்சியே உங்களின் ஆயுதம் என்று காரியமாற்றுவீர்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். நூதன முயற்சிகளையும் செயல்படுத்துவீர்கள். மாற்றி யோசித்து செயல்களைச் செய்து சாதனைகளைப் புரிவீர்கள். குடும்பத்தினரிடையே இணக்கங்கள் கூடும். புதிய படைப்புகளைப் படைப்பீர்கள். புதிய அனுபவங்களையும் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு தக்க அறிவுறைகளையும் வழங்குவீர்கள். குழந்தைகளால் இருந்த பிரச்னைகள் மாறி சீரான நிலை உண்டாகும். உங்களின் தெய்வ பலம் அதிகரிக்கும். புனித யாத்திரை சென்று வருவீர்கள். இந்த காலத்தில் உங்கள் மனதிலிருந்த பாரம் தீர்ந்து லேசானது போன்று உணர்வீர்கள். போதும் என்கிற மனம் அனைத்து விஷயங்களிலும் உண்டாகும். பூர்வீகச் சொத்திலிருந்து வந்த வில்லங்கங்கள் மறையும். வழக்கு வியாக்யானங்களும் ஏற்படாது காக்கப்படுவீர்கள். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அனைத்து விஷயங்களிலும் உங்களை இறையருள் தொடரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடம் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்வார்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வேலையில் புதுப்புது பிரச்னைகள் தோன்றினாலும் அவைகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகச் சூழல் உங்களுக்கு அனுகூலமாகவே இருக்கும் காலகட்டமிது. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் நல்ல நிலையை காண்பார்கள். வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். அதனால் மேலும் முதலீடுகள் செய்வதற்கான எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் உங்களை ஊக்கப் படுத்துவார்கள். உங்கள் தன்னம்பிக்கை பலப்படும். ஓய்வில்லாமல் உழைத்து நல்ல லாபத்தை அள்ளுவீர்கள். விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். கொள்முதலில் அதிக லாபத்தினை காண்பீர்கள். விவசாயத் தொழிலாளர்களும் உங்களின் மனமறிந்து நடப்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளிடமும் கட்சித் தலைமையிடமும் கவனமாக இருக்கவும். கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். கலைத்துறையினர் சற்று கடினமாகவே உழைப்பார்கள். துறையில் நிபுணத்துவத்தை எட்டுவீர்கள். எந்தப் பிரச்னையையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் அனுசரித்துச் செல்வீர்கள். குடும்பத்தினருடன் மனத்தாங்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக நடந்து கொள்ளுங்கள். வெளியூரிலிருந்து மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். மாணவமணிகள் கல்வியில் படிப்படியாக முன்னேற்றங்களைக் காண்பீர்கள். பயிற்சிகளைச் சரியாகச் செய்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். கணினி பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள். உடல்நலம் சிறப்பாகவே இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.