விருச்சிகம் - தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2017

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வீர்கள்.
விருச்சிகம் - தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2017
Updated on
2 min read

விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வீர்கள். சகஜமாக அனைவரிடமும் பழகுவீர்கள். நோய்கள் தீர்ந்து ஆரோக்கியமாக காட்சியளிப்பீர்கள். குடும்பத்தில் இழுபறியான விஷயங்களும் முடிவுக்கு வரும். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கொண்டு செல்வம் சேர வழிவகுப்பீர்கள். சமூக சேவைகளில் உங்களை விளம்பரமில்லாமல் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பாராட்டுகள் தேடிவரும். நல்லவர்களை நண்பர்களாகத் தேடிப் பெறுவீர்கள். செயலாற்றுவதற்கு பலமுறை யோசிப்பீர்கள். முன்வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள். செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உடன்பிறந்தோரின் முன்னேற்றத்திற்காக உழைப்பீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். உங்களின் பேச்சு வன்மையால் பெரியோர்களையும் கவர்ந்துவிடுவீர்கள். நெடுநாளாக தள்ளிப்போயிருந்த சுபகாரியங்கள் இந்த காலகட்டத்தில் நடந்தேறும். மேலும் குழந்தைகளை அயல்நாட்டுக்குச் சென்று படிக்க வைப்பீர்கள். குழந்தைபாக்கியம் இல்லாதோருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் செல்லவும். அவர்களின் சிறு தவறுகளை கண்டும் காணாமலும் இருங்கள்.  

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமலும் சுயகட்டுப்பாட்டுடனும் நடப்பீர்கள். பிரபலமானவர்களின் நட்பும் ஆதரவும் தேடிவரும். தாயின் வழியில் நலன்கள் வரக் காண்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளும் குறையும். மனதில் இருந்த சஞ்சலங்களும் விரக்தியும் நீங்கும். படிப்படியாக சேமிப்பு உயரும். அசையாச் சொத்துகள் மூலமாகவும் வருமானம் வரும். இழந்த புகழ், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புதிய ஆலயங்களுக்கும் சென்று வருவீர்கள். தாமதித்துவந்த சுபகாரியங்களும் துரிதமாக நடக்கும். உங்கள் மீது போடப்பட்டிருந்த பொய் வழக்குகளிலிருந்தும் விடுபடுவீர்கள். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தேவையான உதவிகளை அவர்கள் தக்க நேரத்தில் செய்வார்கள். ஏளனமாகப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் உங்கள் வாழ்க்கைமுறை சீரடையும் என்றால் மிகையாகாது.
 
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு அதிகரிக்கும். அதனால் கடினமாக உழைப்பீர்கள். அலுவலகத்தில் இருக்கும் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்துகொண்டு அவர்களின் நட்பைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். நீங்கள் விரும்பிய இடமாற்றம் இந்த ஆண்டு கிடைக்கும். வருமானத்திற்கும் குறைவு வராது. வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராக நடக்குமென்றாலும் எந்த அதிரடி மாற்றத்தையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். கூட்டாளிகளையும் அனாவசியமாகச் சந்தேகப் படவேண்டாம். பழைய எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். எனினும் கவனமாக இருக்கவும். இந்த ஆண்டு அலைந்து திரிந்து வியாபாரம் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். இதனால் கால்நடைகளை வாங்கி மகிழ்வீர்கள். பாசனத்துறையிலும் கவனம் செலுத்துவீர்கள். உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவதற்கு அதிகம் கஷ்டப்பட நேரிடும். சக விவசாயிகளும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள்.

அரசியல்வாதிகள் வளர்ச்சியைக் காண்பார்கள். மாற்றுக் கட்சியினரின் தொல்லைகள் இராது. மகிழ்ச்சியுடன் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். பொதுச் சேவையில் பெயர் புகழ் பெறுவீர்கள். தொண்டர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு பாராட்டும் விருதுகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சிறிது காலதாமதம் ஏற்படும். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கு கூடுதல் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் ஆதரவும் நன்றாக இருப்பதால் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பும் இருக்கும். பணவரவு சரளமாக இருக்கும். மாணவமணிகள் எதிர்வரும் இடையூறுகளைச் சமாளித்து
வெற்றிவாகை சூடுவீர்கள். உடற்பயிற்சிகளைச் செய்து மனப்புழுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com