மேஷம்
20 March – 19 April

மேஷ ராசி என்பது ராசிமண்டலத்தில் முதல் ராசியாகும்.

மேஷம் (♈) / ɛəri ː z / ("ராம்" என்று பொருள்) பூஜ்யம் டிகிரி மற்றும் வான தீர்க்க ரேகை 29 டிகிரி இடையே இராசி பரவியிருக்கின்றது இது சோதிடத்தினுள், முதல் ஜோதிட அறிகுறியாகும். இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 விழுந்தால், மற்றும் ஏப்ரல் 20 வரை இந்த அறிகுறி உள்ளது இது வடக்கு தட்சிணாயணம், எட்டும்போது ஜோதிடம் வெப்ப மண்டல அமைப்பின் படி, சன் ஏரீஸ் அறிகுறி நுழைகிறது. மீன்வழி சோதிடத்தில், சூரியன் தற்போது ஏப்ரல் 15 முதல் மே 15 ஏரீஸ் விண்மீன் தொகுப்பில் (தோராயமாக) transits. அவர்கள் பதிவு ஜோதிடம் எந்த அமைப்பு சார்ந்து இந்த தேதிகளில் பிறந்த தனிநபர்கள், Arians அல்லது Ariens என்று அழைக்கப்படுகிறது.

இன்றைய நாள் பலன், மாத ராசி பலன் கணித்தவர்:

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

வார, வருட பலன்கள் கணித்தவர்:

கே.சி.எஸ். ஐயர்

இன்று

மே 27

மேஷம்:

இன்று தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

இந்த வாரம்

மே 27-ஜூன் 2

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எந்த ஒரு செயலிலும் உங்களின் தனித்தன்மை வெளிப்படும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் தென்படும். எதிரிகளின் பலம் குறையும். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். புனிதப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வர். உறவினர்கள் ஆதரவு கிடைக்காது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் உங்களின் வேலைகளை தாங்களாகவே முன்வந்து பகிர்ந்து செய்வர். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலைமை தென்படும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கைத் தேவை. விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைச் செய்வர்.

அரசியல்வாதிகள் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெற்று புதிய பதவியில் அமர்வர். கலைத்துறையினர் அனைத்து வேலைகளையும் நேர்த்தியாகச் செய்து முடிப்பர். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மாணவ

மணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் அள்ளுவர். விளையாட்டில் சாதனைகள் செய்வர்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 27,28. சந்திராஷ்டமம்: இல்லை.

இந்த மாதம்

மே மாத பலன்கள்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

எந்த காரியத்தை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று மனதுக்குள் போடும் திட்டங்களை ரகசியமாக வைத்து காரியம் சாதிக்கும் திறமை பெற்ற மேஷ ராசியினரே இந்த மாதம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். கட்டுப்பாடற்ற சுதந்திர எண்ணம் உண்டாகும். சில்லறை விஷயங்களில் மனநிறைவு ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப் பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள்.

பெண்களுக்கு பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனமாக செய்வீர்கள்.

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அஸ்வினி:

பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் வந்து சேரும். உங்களுடைய உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.

பரணி:

தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்.

கார்த்திகை 1-ம் பாதம்:

பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 22 - 23

அதிர்ஷ்ட தினங்கள்: 7 - 8

அதிர்ஷ்ட ஹோரைகள்:

வளர்பிறை: குரு, சுக்ரன்; தேய்பிறை: குரு,சுக்ரன்

இந்த ஆண்டு

ஜோதிடம்