எண் ஜோதிடம்

ஒருவர் பிறந்த தேதியை ஒற்றையாக்கினால், அது பிறந்த எண்ணாகும். பிறந்த தேதி, மாதம், வருட எண்களைக் கூட்டி ஒற்றையாக்கினால் அது கூட்டு எண். உதாரணமாக, 18-ம் தேதி ஒருவர் பிறந்திருந்தால் அவருடைய பிறந்த எண் 9. எப்படியெனில் 1+8=9. மாதம் 8, ஆண்டு 1946 எனில் (8+1+9+4+6) 28 வரும். அத்துடன், தேதி 18-யும் கூட்டினால், (28+18) 46 வரும். ஆக, கூட்டு எண் 1.

இந்த மாத பலன்கள்

பிப்ரவரி - 2017

எந்தக் காரியத்திலும் துடிப்புடனும் வேகமாகவும் செயல்படும் நான்காம் எண் அன்பர்களே, நீங்கள் பதற்றத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. இந்த மாதம் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யத் தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்கப்பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் - மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். பெண்களுக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். 

பரிகாரம் : நாகதேவதைக்கு பால் அர்ப்பணித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும். 

சிறப்பான கிழமைகள் : ஞாயிறு, வெள்ளி

அனுகூலமான திசைகள் : கிழக்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட எண்கள் : 1, 4, 6

மாசி மாதம்

நூதனமான காரியங்களில் ஈடுபாடு உடைய நான்காம் எண் அன்பர்களே, நீங்கள் அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் திறமையானவர். இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் இழுபறி ஏற்பட்டு நன்மையாக முடியும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்கவேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்கவேண்டி இருக்கும். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். கவனமாகப் பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம்பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் புரிந்துகொள்வது நல்லது. 

அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு - தென்கிழக்கு - தெற்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1 - 4 - 6

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை - இளம் சிவப்பு - நீலம்

பரிகாரம்: சூரியனை வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.