புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன?

இந்தியாவின் எல்லைகள், யுகங்கள், ஐம்பத்தாறு தேசங்களின் பெயர்கள் ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் என்னென்ன?

இந்தியாவின் எல்லைகள், யுகங்கள், ஐம்பத்தாறு தேசங்களின் பெயர்கள் ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ எனும் புத்தகத்தில் பட்டியல் இடப்பட்டு ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகத்தை எழுதியவர் பி.வி.ஜகதீச அய்யர். இந்தப் புத்தகம் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இந்தியா என்ற புராதன தேசத்தின் புவியியல் பிரிவுகளையும், பண்பாட்டு, இயற்கை வளங்களையும் ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கும் நூல் இது. அதில் குறிப்பிட்டுள்ள 56 தேசங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

1.குருதேசம்

2. சூரசேனதேசம்

3. குந்திதேசம்

4. குந்தலதேசம்

5. விராடதேசம்

6. மத்ஸ்யதேசம்

7. த்ரிகர்த்ததேசம்

8. கேகயதேசம்

9. பாஹலிகதேசம்

10. கோஸலதேசம்

11. பாஞ்சாலதேசம்

12. நிஷததேசம்

13. நிஷாததேசம்

14. சேதிதேசம்

15. தசார்ணதேசம்

16. விதர்ப்பதேசம்

17. அவந்திதேசம்

18. மாளவதேசம்

19. கொங்கணதேசம்  

20. கூர்ஜரதேசம்

21. ஆபிரதேசம்

22. ஸால்வதேசம்

23. சிந்துதேசம்

24. செளவீரதேசம்

25. பாரசீகதேசம்

26. வநாயுதேசம்

27. பர்பரதேசம்

28. கிராததேசம்

29. காந்தாரதேசம்

30. மத்ரதேசம்

31. காச்மீரதேசம்

32. காம்போஜதேசம்

33. நேபாளதேசம்

34. ஆரட்ட தேசம்

35. விதேஹதேசம்

36. பார்வததேசம்

37. சீனதேசம்

38. சாமரூபதேசம்

39. ப்ராக்ஜோதிஷதேசம்

40. சிம்மதேசம்

41. உத்கலதேசம்

42. வங்கதேசம்

43. அங்கதேசம்

44. மகததேசம்

45. ஹேஹயதேசம்

46. களிங்கதேசம்

47. ஆந்த்ரதேசம்

48. யவனதேசம்

49. மஹாராஷ்டரதேசம்

50. குளிந்ததேசம்

51. திராவிடதேசம்

52. சோழதேசம்

53. சிம்மளதேசம்

54. பாண்டியதேசம்

55. கேரளதேசம்

56. கர்னாடக தேசம்

யவனம், கிராதம், பாரசீகம், காம்போஜம், சீனம் முதலிய சில தேசங்களில் வேறு ஜாதி ஜனங்கள் நெடுநாளாய் வசிக்கிறபடியால் அவர்களுடைய மதமும், ஆசாரமும், உணவும், உடுப்பும் ஓர் விரோதமாகவே காணப்படும்.

மேற்சொல்லிய தேசங்களைத் தவிர மற்றும் சில தேசங்களில் புத்தர்களும், ஜைனர்களும், விசேஷமாய்க் குடி ஏறி வாசம் செய்து வருகிறார்கள். 

மேற்கூறப்பட்ட தகவல்களை மிக விரிவான தளத்தில் நூறு வருடங்களுக்கு முற்பட்ட தமிழில் எழுதியுள்ளார் ஆசிரியர். இதுபோன்ற புத்தகங்கள் அரிது. குடியரசு தினத்தில் நம்முடைய பண்டைய வரலாற்றினையும் மூதாதையரின் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்வதில் சுவாரஸ்யம் உள்ளது அல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com