ஹைதராபாத்: புவியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் மூலம் சதீஸ்தவான் விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
கடந்த 2003ஆம் அண்டு ரிசோர்ஸ் சாட்-1 செயற்கைக்கோளையும், 2011-ஆம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதையடுத்து ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. இதனை 1,235 கிலோ எடையில், புவியை கண்காணிக்க மற்றும் தொலை உணர்வுக்காக தயாரித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை 10.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 36 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 10.25 தொடங்கியது.
இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 817 கி.மீ தூரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் மூலம், புவியில் உள்ள இயற்கை வளங்களை துல்லியமாக படம்பிடிக்க முடியும்.
1994 மற்றும் 2016க்கும் இடையில், பி.எஸ்.எல்.வி. 121 செயற்கைக்கோள்கள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது, இதில், 79 செயற்கைக்கோள்கள் வெளிநாடுகளில் இருந்தும் 42 செயற்கைக்கோள்கள் இந்தியாவிலிருந்தும் செலுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

இறந்தவா்களின் உடைமைகளை தாமிரவருணியில் வீசுவதற்குத் தடை

தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம்!

கண்களைக் கட்டிக்கொண்டு குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்பு
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



