ரயில், அரசு பஸ்களில் பழைய ரூ.500 நோட்டு நாளை வரை மட்டுமே செல்லும்

ரயில், மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஆகியவற்றில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை மட்டுமே பழைய ரூ.500 நோட்டு செல்லுபடியாகும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
Published on
Updated on
1 min read

ரயில், மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஆகியவற்றில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை மட்டுமே பழைய ரூ.500 நோட்டு செல்லுபடியாகும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக டிசம்பர் 15-ஆம் தேதி வரை ரயில், மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டுகள் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 5 நாட்களுக்கு முன்னதாகவே ரயில், பஸ்களில் பழைய ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அன்று பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com