சென்னையை திங்கள்கிழமை கடந்து சென்ற "வர்தா' புயல் படிப்படியாக நகர்ந்து சென்று கோவாவின் தெற்குப் பகுதியை வரும் 14-ஆம் தேதி கடக்கவுள்ளது.
இதுதொடர்பாக பனாஜியில் கோவா வானிலை மைய இயக்குநர் எம்.எல். சாஹு செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தமிழகத்தை திங்கள்கிழமை தாக்கிய "வர்தா' புயல், கர்நாடகத்தை செவ்வாய்க்கிழமை (டிச.13) வந்தடையும். பிறகு, கோவாவின் தெற்குப் பகுதியை வரும் 14-ஆம் தேதியன்று "வார்தா' புயல் கடக்கும்.
இதன் காரணமாக, கோவாவில் இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றார் எம்.எல். சாஹு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.