முந்தைய ஆட்சிகளில் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஊழல்: ராஜ்நாத் சிங்

தம் திறமையை தாமே நம்பாததாலும், வெளிப்படைத்தன்மையின்மையாலும் முந்தைய மத்திய அரசுகளின் ஆட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஊழல்
வர்த்தக அமைப்பான 'அசோசெம்' தில்லியில் புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த 'பாதுகாப்பு உற்பத்தி' தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். உடன் 'அசோசெம்' அமைப்பின் தலைவர் சுனில் கன
வர்த்தக அமைப்பான 'அசோசெம்' தில்லியில் புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த 'பாதுகாப்பு உற்பத்தி' தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். உடன் 'அசோசெம்' அமைப்பின் தலைவர் சுனில் கன

தம் திறமையை தாமே நம்பாததாலும், வெளிப்படைத்தன்மையின்மையாலும் முந்தைய மத்திய அரசுகளின் ஆட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஊழல் நடைபெற்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
வர்த்தக அமைப்பான "அசோசெம்' தில்லியில் புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த "பாதுகாப்பு உற்பத்தி' தொடர்பான மாநாட்டில் பங்கேற்று அவர் மேலும் கூறியதாவது:
முந்தைய மத்திய அரசுகளின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு உற்பத்தி ஊக்குவிக்கப்படவில்லை. பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று முந்தைய அரசுகள் விரும்பியிருக்கலாம். ஆனாலும் அதைச் செயல்படுத்துவதில் அவை வெற்றி பெறவில்லை.
இதன்காரணமாக பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் போட்டித்தன்மை ஏற்படாமல் ஊழல்கள் நடைபெற்றன.
பாதுகாப்புத் துறை தொடர்பாக ஊடகங்களில் மத்திய அரசுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும், பாதுகாப்புத் துறையில் வெளிப்படைத்தன்மையையும், போட்டித்தன்மையையும் அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.
பாதுகாப்புத் துறையில் மற்ற நாடுகளை நம்பியிருப்பது தவிர்க்கப்பட வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்புக்கு நம் திறமையை நம்ப வேண்டியது அவசியம்.
பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்வதில் இஸ்ரேல், சீனா ஆகிய நாடுகள் ஆர்வமாக இருப்பதுடன், தேவைப்பட்டால் இந்தத் துறையில் தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்ளவும் தயாராக இருக்கின்றன. பாதுகாப்புத் துறையை நாம் மேலும் ஊக்குவிக்க வேண்டும்.
முந்தைய அரசுகளைக் காட்டிலும் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட உபகரணங்கள் வாங்குவதற்கான முடிவுகள் தற்போது மிக வேகமாக எடுக்கப்படுகின்றன.
மிகக் குறைந்த செலவில் மங்கல்யான் விண்கலத்தை நம்மால் உற்பத்தி செய்ய முடியும்போது நாம் ஏன் மற்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டும்? என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி அமல்: இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே விதமாக வரி விதிப்பதற்கு ஏற்ப சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அமல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com