லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாட்டில் கலவரம் வெடிக்கலாம்: எச்சரித்த உச்சநீதிமன்றம்!

ரூபாய்  500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு நாட்டில் கலவரம் வெடிக்க காரணமாகலாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2016, 2:26 pm

புதுதில்லி: ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு நாட்டில் கலவரம் வெடிக்க காரணமாகலாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான அனைத்து விசாரணைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று  கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி அனில் ஆர். தாவே உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:

நாடு முழுவதும் பொதுமக்கள் பணத்துக்காக அங்கும் இங்குமாக அலைவது வேதனையைத் தருகிறது. மக்கள் தங்கள் சொந்த பணத்தை எடுக்க பல மணிநேரங்கள் காத்திருக்கிறார்கள். நாடு முழுவதும் மக்களுக்கு அதிக பிரச்சனை இருப்பதால்தான் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடி நீதிமன்றத்தை நாடும் பொழுது எங்களால் நீதிமன்றத்தின் கதவுகளை அடைக்க முடியாது. வேண்டும் என்றால் அனைத்து வழக்குகளையும் தில்லிக்கு மாற்றுவது குறித்து மட்டுமே பரிசீலிக்க முடியும்.

இந்த பிரச்சினை காரண்மாக நாட்டில் கலவரம் கூட வெடிக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் கருத்துக்களை தெரிவித்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.