பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையின்
நிலவரம் குறித்து தில்லியில் உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆய்வு நடத்தினார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, நாடு முழுவதும் வங்கிகள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றில் போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுகள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொதுமக்கள் சிரமங்கள் ஏதுமின்றி புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, திருமணச் செலவுகளுக்கும், விவசாயிகளுக்கும் சில சலுகைகள் உள்பட 7 புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.