புது தில்லி: பாஜக எம்பிக்கள் அனைவரும், தங்களது வங்கிப் பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை தாக்கல் செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அதாவது, நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கில் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனை குறித்த முழு தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஜக எம்பிக்களுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பாஜக தலைவர் அமித் ஷாவிடம் வரும் ஜனவரி 1ம் தேதிக்குள், அனைத்து எம்.பி.க்களும் தங்களது வங்கிக் கணக்கில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








