

புது தில்லி: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, செப்டம்பர் 7ம் தேதி முதல் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. ஏராளமான பேருந்துகள், லாரிகள் வான்முறையாளர்களின் வெறியாட்டத்தால் தீக்கிரையாகின.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு நிலை மோசடைந்தது குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை நாளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.