எந்த சமூகத்திடமும் பாஜக பாரபட்சம் காட்டியதில்லை

சமூகத்தில் எந்தவொரு பிரிவினரிடமும் பாஜக பாரபட்சம் காட்டியதில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.
எந்த சமூகத்திடமும் பாஜக பாரபட்சம் காட்டியதில்லை
Published on
Updated on
1 min read

சமூகத்தில் எந்தவொரு பிரிவினரிடமும் பாஜக பாரபட்சம் காட்டியதில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.
திருவல்லா நகரில் உள்ள மர்தோமா சிரியன் தேவாலயத்தின் ஆயர் பிலிப்போஸ் மர்கிரிசோஸ்தத்தின் 100-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அத்வானி பேசியதாவது: சமூகத்தில் அனைத்து பிரிவினரும் மதிக்கப்பட வேண்டும் என்பதை பாஜக உறுதிமொழியாக எடுத்துக் கொண்டுள்ளது. ஜாதி, மத, இன, பாலின ரீதியாக சமூகத்தில் எந்தவொரு பிரிவினரிடமும் பாஜக பாரபட்சம் காட்டியதில்லை. எங்கள் கட்சி அவ்வாறு ஒருபோதும் செய்யாது. ஜாதி, பாலின ரீதியாக எவரும் புறக்கணிக்கப்படக் கூடாது. அனைவரும் ஒருசேர முன்னேற வேண்டும்.
நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்ட காலத்தில் மர்தோமா தேவாலயம் முக்கியப் பங்காற்றியது. அக்காலத்தில் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு இந்த தேவாலயம் ஆதரவு அளித்தது. பிலிப்போஸ் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். அவருக்கு 100 வயது ஆகிவிட்டபோதிலும் அவரது சிந்தனை எப்போதும் இளைமையுடனே உள்ளது. எனக்கு இந்த ஆண்டில் 90-ஆவது வயது பிறக்கிறது என்றார் அத்வானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com