திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா விரைவில் நிறைவேற்றம்

திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே
திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா விரைவில் நிறைவேற்றம்

திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் கூறியதாவது: நாட்டில் திருநங்கைகளுக்கு எதிராக கொடுமைகளும், அநீதிகளும் தொடர்ந்து இழைக்கப்படுவது வருத்தமளிப்பதாக உள்ளது. திருநங்கைகள் அவர்களது குடும்பத்தினராலேயே வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள். எனவே, தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக திருநங்கைகள் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது.
ஆண்களும், பெண்களும் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுள்ளதைப் போல, திருநங்கைகளும் தங்களுக்கான உரிமைகளைப் பெற வேண்டும். இதற்காக, கடந்த ஆண்டில் ஒரு மசோதா வரையப்பட்டு, அது நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பட்டுள்ளது.
விரைவில் அந்த மசோதா நரேந்திர மோடி அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, திருநங்கைகளுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரும்.
திருநங்கைகளின் நலன்களைப் பாதுகாக்க அவர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும் அவசியம் என்றார் அவர்.
திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com