ஏழைகளுக்கான சமையல் எரிவாயு மானியம் தொடரும்: தர்மேந்திர பிரதான்

ஏழைகளுக்கான சமையல் எரிவாயு மானியம் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபடத் தெரிவித்தார்.
ஏழைகளுக்கான சமையல் எரிவாயு மானியம் தொடரும்: தர்மேந்திர பிரதான்

ஏழைகளுக்கான சமையல் எரிவாயு மானியம் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபடத் தெரிவித்தார்.

சமையல் எரிவாயுக்கான மானியம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட துறைக்கான அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
திரிபுரா மாநிலம், அகர்தலாவில் ரூ.143 கோடி மதிப்பீட்டிலான சமையல் எரிவாயு உற்பத்தி தொழிற்சாலைக்கு தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார். அப்போது அங்குள்ள செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
அகர்தலாவில் இந்த சமையல் எரிவாயு உற்பத்தி தொழிற்சாலை 2019-ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்பட்டுவிடும். அவ்வாறு அமையப்பெற்றால், சமையல் எரிவாயு விநியோகம் இப்போது இருப்பதைப் போல் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறையைக் கருத்தில்கொண்டு, வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வங்கதேசத்தின் சிட்டகாங்கிலிருந்து திரிபுரா வரையில் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக வங்கதேச அரசிடம் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு வங்கதேசம் ஒப்புதல் அளித்தவுடன், குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றார் தர்மேந்திர பிரதான்.
மானியம் தொடரும்: முன்னதாக, சமையல் எரிவாயுக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தவுள்ளதாக அறிவிப்புகள் வெளியானது பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்து அவர் கூறுகையில், "ஏழைகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் வரும் சமையல் எரிவாயுக்கான மானியம் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது. சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கான மானியங்கள் தொடரும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com