தேசப்பற்றை வளர்க்கும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

சுதந்திர தினத்தையொட்டி, தேசப்பற்றை உருவாக்கும் விதமாக, அனைத்துப் பள்ளிகளிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி, தேசப்பற்றை உருவாக்கும் விதமாக, அனைத்துப் பள்ளிகளிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையச் செயலர் மணீஷ் கார்க் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தூய்மையான, வறுமையற்ற, ஊழலற்ற, பயங்கரவாதம் அல்லாத, மதவாதம் அல்லாத "புதிய இந்தியா' திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
பிரதமர் மோடியின் இந்தத் தொலைநோக்குத் திட்டத்தை நனவாக்குவதற்காக, அதில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்கும் விதமாகவும், சேதப்பற்றை உருவாக்கும் விதமாகவும், அனைத்துப் பள்ளிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட வேண்டும். இந்த விழாவை, ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை மாநில அரசுகள் கொண்டாட வேண்டும்.
பள்ளிகளில் சுதந்திர தின உறுதிமொழி ஏற்பது தவிர, சிபிஎஸ்இ பள்ளிகளில் சுதந்திர போராட்டம், நாட்டின் வளர்ச்சி ஆகியவை தொடர்பாக வினாடி-வினா நிகழ்ச்சி, ஓவியப் போட்டிகள் நடத்தலாம்.
அந்த வினாடி-வினாவுக்கான கேள்விகள், பிரதமர் மோடியின் இணையதளப் பக்கத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று அந்தக் கடிதத்தில் மணீஷ் கார்க் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கம் மறுப்பு: இதனிடையே, மத்திய அரசின் சுற்றறிக்கையின்படி, சுதந்திர தின விழாவை பள்ளிகள் கொண்டாட வேண்டாம் என்று மேற்கு வங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாநில பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், ""சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு மறுப்பு தெரிவித்திருப்பது புதிராக உள்ளது. இதுபற்றி மாநில அரசிடம் பேசப்படும். நாங்கள் அரசியல் கட்சிக் கொள்கைகளைப் பிரபலப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com