பொது மக்களிடம் நிதி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஜேட்லி கூறியதாவது:
சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நலனைக் காக்கும் வகையில், புதிய சட்ட மசோதாவை விரைவில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. "க்ளீன் இந்தியா' திட்டத்தின் பகுதியாக இந்த சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.
மீண்டும் ஏழைகளிடம் நிதிநிறுவனங்கள் மோசடியில் ஈடுபடாமல் தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வர வேண்டிய உடனடி அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் ஜேட்லி.
பொது மக்களின் கருத்தை அறிவதற்காக, இணையதளத்தில் அந்த சட்ட மசோதா வெளியிடப்படும். அதையடுத்து, அந்த மசோதாவை இறுதி செய்து, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.
மேற்கு வங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதிநிறுவனம், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களிடம் கோடிக்கணக்கில் நிதியைப் பெற்று திருப்பியளிக்காமல் மோசடி செய்தது. இதேபோல், ரோஸ்வேலி நிறுவனமும், பல ஆயிரம் கோடி மதிப்பில் பொது மக்களிடம் இருந்து நிதி வசூலித்து மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.