பஞ்சாபில் நீல குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ. 25 வீதம் 2 கிலோ நெய்யும், கிலோ ரூ. 10 வீதம் 5 கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது.
இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜலந்தரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், "மாநிலத்தின் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது' என தெரிவித்தார்.
16 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் வீடு கட்டித் தரப்படும். தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு நிலம் வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தபட்சம் ஒருவருக்காவது வேலை வழங்கப்படும்.
ஆராய்ச்சிப் படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். பஞ்சாபில் பிரிவினைவாத போராட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்
படும்.
விவசாயிகள் வருவாய் ஆணையம் அமைக்கப்படும். விவசாயிகளோ, வர்த்தகர்களோ திடீரென உயிரிழந்து விட்டால், அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆணையத்தின் மூலம் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்படும் என்பவை உள்ளிட்ட வாக்குறுதிகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி; இளைஞா் மீது வழக்குப் பதிவு

அரசுக் கல்லூரில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தேநீா்க் கடை வைத்துத் தருவதாகக் கூறி ரூ. 15 லட்சம் மோசடி; தாய், மகன் மீது வழக்கு
பறவை கண்காணிப்பில் பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க தேசிய உயிரியல் பூங்காவின் முன்முயற்சி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



