உலகின் வயதான விமானந்தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விராட் இன்றுடன் ஓய்வு! 

உலகின் வயதான விமானம் தாங்கி கப்பலான இந்தியாவின் ஐஎன்எஸ் விராட் இன்று முதல் கடற்படை பணியிலிருந்து ஓய்வுபெறுகிறது.
உலகின் வயதான விமானந்தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விராட் இன்றுடன் ஓய்வு! 

மும்பை: உலகின் வயதான விமானம் தாங்கி கப்பலான இந்தியாவின் ஐஎன்எஸ் விராட் இன்று முதல் கடற்படை பணியிலிருந்து ஓய்வுபெறுகிறது.

இந்திய  கடற்படையைப் பொறுத்த வரை ஐ.என்.எஸ். வீராட் மற்றும் ஐ.என்.எஸ்.  விக்ரமாதித்யா எனும் இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐ.என்.எஸ். வீராட் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் எனும் பெருமையைப் பெற்றதாகும். இக்கப்பல் 1943ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தினால் உருவாக்கப்பட்டது. 30 ஆண்டுகளாக இந்தியக்கடற்படை பாதுகாப்புப் பணிகளுக்கு பயன்பட்டு வந்தது. இக்கப்பல் முதலில் ஆங்கிலேய ஆட்சியின் போதே 27 ஆண்டுகள் கடற்படையில் பணியிலிலிருந்தது. பின்னர் 1987ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. 

இது உலகின் மிகச் சிறந்த விமானம் தாங்கி கப்பல்களில்  ஒன்றாகக் கருதப்படுகிறது. 23 ஆயிரத்து 900 டன் எடை கொண்ட இந்த கப்பல் 226.5 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகல மும் கொண்டது.  இந்த விமானத் தில்  இருந்து ஒரே நேரத்தில் 18 விமானங்கள் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐஎன்எஸ் விராட் கப்பலின் பனி ஓய்வு விழா இன்று மும்பை கடற்படை தளத்தில் நடந்தது.  இதில் வீராட் கப்பலின் கமாண்டர்களாக பணிபுரிந்த 22  பேரில் 21 பேர் பங்கேற்றனர். அவர்கள் உணர்ச்சி பொங்க வீராட் போர்க்கப்பலுக்கு  விடை கொடுத்தனர்.

பிரிவுபசார  விழா முடிந்த பிறகு இந்த கப்பல் குஜராத் மாநிலத்தில் உள்ள அலங் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு அந்த கப்பலை 4 மாதம் வெறுமனே நிறுத்தி வைப்பார்கள். இந்த 4 மாதத்துக்குள் வீராட் கப்பலை யாரும் வாங்கா விட்டால் அதை  துண்டு துண்டாக உடைத்து  விட முடிவு  செய்துள்ளனர்.

இதற்கிடையே  ஆந்திர மாநில அரசு  வீராட் கப்பலை வாங்கி விசாகப்பட்டினத்தில் நிறுத்தி  மியூசியமாக மாற்றும் திட்டமின்றை அறிவித்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1000 கோடி  வரை தேவைப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com