மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வேண்டுகோள்: பிரிட்டன் அரசு ஏற்பு

மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வேண்டுகோள்: பிரிட்டன் அரசு ஏற்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக் கோரும் இந்தியாவின் வேண்டுகோளை பிரிட்டன் அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக் கோரும் இந்தியாவின் வேண்டுகோளை பிரிட்டன் அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்ற சுமார் ரூ.9,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக கிங்ஃபிஷர் நிறுவனர் விஜய் மல்லையா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வேறு சில பண மோசடி வழக்குகளும் மல்லையா மீது பல்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருக்கின்றன. சில வழக்குகளில் அவருக்கு எதிராக பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக பிரிட்டனில் தஞ்சமடைந்திருக்கும் மல்லையாவை நாடு கடத்தக் கோரி அந்நாட்டு அரசுக்கு இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது.
இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இந்தக் கோரிக்கை மனுவை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மல்லையாவை நாடு கடத்தக் கோரும் இந்தியாவின் கோரிக்கை மனுவை பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து, அந்தக் கோரிக்கை மனுவானது வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக விரைவில் அனுப்பப்படவுள்ளது. மனுவைப் பரிசீலித்த பின்னர், மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான உத்தரவைப் பிறப்பிப்பது குறித்து நீதிபதி முடிவெடுப்பார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com