உ.பி. முதல்வராகப் பதவியேற்ற ஒரு வார காலத்துக்குள் 50 முக்கிய முடிவுகள்: யோகி ஆதித்யநாத் சாதனை

உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்ற ஒரு வார காலத்துக்குள் 50 முக்கிய முடிவுகளை எடுத்து யோகி ஆதித்யநாத் சாதனை புரிந்துள்ளார்.
உ.பி. முதல்வராகப் பதவியேற்ற ஒரு வார காலத்துக்குள் 50 முக்கிய முடிவுகள்: யோகி ஆதித்யநாத் சாதனை

உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்ற ஒரு வார காலத்துக்குள் 50 முக்கிய முடிவுகளை எடுத்து யோகி ஆதித்யநாத் சாதனை புரிந்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு அண்மையில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 403 தொகுதிகளில், பாஜக கூட்டணி 325 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக 312 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதையடுத்து, பாஜக எம்எல்ஏ-க்கள் கூடி கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத்தை முதல்வராகத் தேர்வு செய்தனர். தொடர்ந்து, அவர் உத்தரப் பிரதேச முதல்வராக கடந்த 19-ஆம் தேதி பதவியேற்றார். மேலும், 2 பேர் துணை முதல்வர்களாகவும், 43 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
இந்நிலையில், பதவியேற்ற ஒரு வார காலத்துக்குள் 50 முக்கிய முடிவுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இதுவரை அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படவே இல்லை.
எனினும், அதற்கு முன்பே யோகி ஆதித்யநாத் முக்கிய முடிவுகளை மேற்கொண்டார். அவற்றுள் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் தங்களின் சொத்து விவரங்களை 15 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது, சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் பசுவதைக் கூடங்களுக்கு தடை விதித்தது, பாலியல் குற்றத் தடுப்புப் பிரிவை அமைத்தது, பொது இடங்களில் பான் மசாலா பயன்படுத்துவதற்கு தடை விதித்தது உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவையாகும்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பின் கோரக்பூருக்குச் சென்ற அவர், 'நாள் ஒன்றுக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை உழைப்பவர்களால் மட்டுமே இந்த அரசில் தொடர முடியும்' என்று குறிப்பிட்டார். அமைச்சர்களும், அதிகாரிகளும் கோப்புகளை அலுவலக நேரத்துக்குள் பார்த்து முடிக்க வேண்டும் என்றும், தங்களது வீடுகளுக்கு கொண்டு செல்லக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் பாஜக எம்எல்ஏ-க்களும், கட்சிப் பிரமுகர்களும் அரசின் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com