வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்காக பெயரளவில் நடத்தப்படும் 'ஷெல்' நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 4.5 லட்சம் நிறுவனங்களின் இயக்குநர்களைத் தகுதி நீக்கம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய நிறுவனங்கள் விவகார இணையமைச்சர் பி.பி. செளத்ரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நேர்மையான முறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது எனவும், 'ஷெல்' நிறுவனங்களால் நல்ல நிறுவனங்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நீண்ட காலம் செயல்படாமல் இருப்பது உள்பட, நிறுவனச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களின் இயக்குநர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது மட்டுமன்றி, அவர்களைப் பற்றிய விவரக் குறிப்புகள் ஆய்வுக்குள்படுத்தபடும் எனவும் அவர் கூறினார்.
வரி ஏய்ப்பு முறைகேடுகளில் ஈடுபடும் வகையில், மிக நீண்ட காலமாக செயல்படாத நிலையிலும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாமலும் உள்ள 2,17,239 நிறுவனங்களின் பதிவுகளை நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் கடந்த மாதம் 22-ஆம் தேதி ரத்து செய்தது.
இந்த நிலையில், மேலும் 4.5 லட்சம் நிறுவனங்களின் இயக்குநர்களையும் தகுதி நீக்கம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பி.பி. செளத்ரி தெரிவித்தார்.
2013-ஆம் ஆண்டின் இந்திய நிறுவனங்கள் சட்டம், 164-ஆவது பிரிவின்படி, ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருந்து, அவர் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குத் தாக்கல் செய்யாமல் இருந்தால், இயக்குநர் பதவியை வகிக்கும் தகுதியை அவரிடமிருந்து பறிக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 2-வது வாரத்தில் தென்மேற்குப் பருவமழை! இந்திய வானிலை!
உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு! விஜய் படத்துடன் பாடலைப் பகிர்ந்த இளையராஜா!

வெயிலை சமாளிக்க 3 வேளை குளியல்! மறுவாழ்வு மையத்தில் யானைகள் குளுகுளு! | Trichy

அணுசக்திக் கழகத்தில் பாராமெடிக்கல் பணிகள்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

