சிறையில் சல்மான் கான்: கைதி எண் 106, வார்ட் எண் 2

நடிகர் சல்மான் கானின் கைதி எண் 106 மற்றும் வார்ட் எண் 2 ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
சிறையில் சல்மான் கான்: கைதி எண் 106, வார்ட் எண் 2

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

1998-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் படப்பிடிப்புக்குச் சென்ற இடத்தில் மான் வேட்டையாடியதாக சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை 20 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சல்மான் கான் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சல்மான் கானுக்கு கைதி எண் 106 மற்றும் வார்ட் எண் 2 ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜோத்பூர் சிறைத்துறை டிஐஜி விக்ரம் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சல்மான் கானுக்கு கைதி எண் 106 வழங்கப்பட்டுள்ளது. வார்ட் எண் 2 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரிய மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. அவருக்கு எவ்வித உடல் உபாதைகளும் இல்லை. எங்களிடம் அவர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. சல்மானுக்கு கைதிக்கான சீருடை வெள்ளிக்கிழமை வழங்கப்படும். அவரது வார்ட்டுக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழக்கில், மான் வேட்டையாடிய போது சல்மான் கானுடன் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com