திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

இந்தியாவில் கரோனா பாதிப்பு 59.92 லட்சத்தைக் கடந்தது: பலி 94.503 ஆக உயர்வு 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,92,533 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 88,600 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 6:19 am

புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,92,533 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 88,600 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,124 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 94,503 ஆக அதிகரித்துள்ளது. எனினும் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.58 ஆக உள்ளது. 

நாட்டில் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 92,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 49,41,627 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். குணமடைந்தோரின் விகிதம் 82.46 ஆக உயர்ந்துள்ளது. 

இப்போதைய நிலையில் நாட்டில் 9,56,402 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 15.96 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி சனிக்கிழமை வரை 7,12,57,836 கரோனா பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 9,87,861 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 35,191 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா். கா்நாடகத்தில் 8,503 பேரும், ஆந்திரத்தில் 5,663 பேரும், தில்லியில் 5,193 பேரும்,  தெலங்கானாவில் 1,100 பேரும், புதுச்சேரியில் 100 பேரும் உயிரிழந்துள்ளனா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.