ரூபாய் நோட்டு விவகாரம்: 22-ஆம் தேதி நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் உர்ஜித் பட்டேல்!

உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழுவிடம் வரும் 22-ஆம் தேதி விளக்கம் அளிக்கிறார் ரிசர்வ் வங்கி
ரூபாய் நோட்டு விவகாரம்: 22-ஆம் தேதி நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் உர்ஜித் பட்டேல்!

புதுதில்லி: உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழுவிடம் வரும் 22-ஆம் தேதி விளக்கம் அளிக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல்.

கறுப்புப் பண ஒழிப்பு, பயங்ரவாதிகளிடம் புழங்கும் பணத்தைத் தடுப்பது, கள்ள நோட்டு விவகாரம் ஆகியவற்றிற்கு முடிவு கட்டும் விதமாக, உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.  இதனையடுத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்ளப்பட்டன. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது.

இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையிலும் கூட, இன்னும் மக்களிடையே பணப்புழக்கம் சீராகவில்லை. வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முன்பு காத்திருக்கும் நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.

இந்நிலையில், 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வரும் 22-ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற குழுவினரிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் விளக்கம் அளிக்க இருப்பதாக, நாடாளுமன்ற இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com