கருப்பு பணத்தை ஒழிக்கவே மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்: கோவாவில் மோடி பேச்சு 

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவா சென்றார்.  அங்கு நடந்த விழாவில் வடக்கு கோவாவில் க்ரீன்பீல்ட் விமான நிலையம்
கருப்பு பணத்தை ஒழிக்கவே மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்: கோவாவில் மோடி பேச்சு 
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவா சென்றார்.  அங்கு நடந்த விழாவில் வடக்கு கோவாவில் க்ரீன்பீல்ட் விமான நிலையம் மற்றும் டியூம் எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினர்.

பின்னர் பேசிய அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஊழலுக்கு எதிராகவே வாக்களித்தனர். கருப்பு பணத்தை ஒழிக்கவே எங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த அரசு எடுத்துள்ள கருப்பு பண நடவடிக்கையால் பலர் தூக்கத்தை தொலைத்துவிட்டனர்.

எனது இந்த முடிவு வெற்றியை கொடுக்கும். இந்த வெற்றி நாட்டு மக்களை சார்ந்தது. டிசம்பர் 30க்குப் பிறகு இந்த முடிவு தவறு என்று நிரூபணமானால் என்னை முச்சந்தியில் நிறுத்தி கேள்வி கேளுங்கள். 

2ஜி. நிலக்கரி ஊழலில் தொடர்பு உடையவர்கள் எல்லாம் இன்று 4 ஆயிரம் ரூபாய் பணத்துக்கு வரிசையில் நிற்கின்றனர் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கி பேசினார். அதேசமயத்தில் நேர்மையாக வாழ்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை நாட்டு மக்களின் சிரமத்தை உணர்கிறேன்.  இது வெறும்  50 நாட்களுக்கு மட்டுமே.

மேலும் கடல் தாண்டிச் சென்ற பணத்தை மீட்பதே இந்த அரசின் நோக்கம். என்று கூறியுள்ளார். இந்த விழாவை முடித்துக் கொண்டு பிற்பகலில் புறப்படும் மோடி, புனேவில் நடக்கும் மற்றொரு பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேச உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com