

2016 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்காவை சேர்ந்த ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் ஆகிய இருவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
மக்கள், அரசாங்கங்கள் மற்றும் வாணிபம் ஆகியவற்றிற்கு இடையேயான ஒப்பந்தம் குறித்து இருவரும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆலிவர் ஹர்ட் குறிப்பாக அரசு சேவைகளை தனியார் மயமாக்கல் தொடர்பாக ஆராய்ச்சி செய்தார். மேலும் குறைந்த செலவில் உயர்தரமான சேவைகளை அரசுகள் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.