முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா ஆபார வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா ஆபார வெற்றி!
Published on
Updated on
1 min read

தரம்சலா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மாசாலாவில் இன்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியது.

ஆரம்பம் முதலே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் பாண்ட்யா ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்துதின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. ஒரு கட்டத்தில் 50 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து 5 விக்கெட்களை இழந்திருந்தது .

நியூசிலாந்து அணியில் 3 பேர் டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். டாம் லாதம்தான் சற்று கவுரவத்தைக் காக்கும் வகையில் ஆடினார். தனி ஒருவனாக அவர் போராடி நிறுத்தி நிதானமாக ஆடியதால்தான் நியூசிலாந் 100 ரன்களைத் தாண்டியது.

40வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 166 ரன்களை எடுத்திருந்தது. மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இறுதிவரை போராடிய டாம் லோதம் மட்டும் ஆட்டமிழக்காமல் 98 பந்துகளில் 79 ரன்களை எடுக்க, நியூஸிலாந்து அணி 43.5 ஓவர்களில் 190 ரங்களுக்கு ஆட்டம் இழந்தது.

இதில், யாதவ் 2 விக்கெட்டுகளும், எச்எச்.பாண்டியா 3 விக்கெட்டுகளும்,கே.எம். ஜாதவ் 2 விக்கெட்டுகளும்,மிஷ்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷர்மா 14 ரன்களிலும், ரஹானே 33 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கி எம்.கே.பாண்டே 17 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.  

அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி - கோஹ்லி ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தோனி 21 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து கோஹ்லிவுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர, கோஹ்லி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 101 பந்துகள் இருக்கும் நிலையில், 33.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (85), கேதர் ஜாதவ் (10) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com