முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கான நடிகர் என்று நிதியமைச்சர் டி.ஜெயகுமார் கூறினார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் உதயசூரியன் பேசியது: அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன் போன்றோர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வந்த காட்சியைப் பார்த்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் வந்தபோதும் பார்த்திருக்கிறோம்.
எல்லோரும் சாதாரணமாக நிதி நிலை அறிக்கையை எடுத்து வந்து வாசித்துள்ளனர் என்று கூறி ஜெயக்குமார் நிதிநிலை அறிக்கையை எடுத்து வந்த முறையைக் குறிப்பிட்டார். அப்போது நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் குறுக்கிட்டுக் கூறியது:
ஓபிஎஸ் நடிப்பில் சிவாஜிகணேசனையே மிஞ்சிவிடுவார். ஓபிஎஸ் அளவுக்கு நாங்கள் ஆஸ்கார் விருது வாங்கும் நடிகர் இல்லை என்றார். இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவையில் அமைதியாக அமர்ந்திருந்தார். அதே நேரம், அவரின் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் எழுந்து அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரினர். ஆனால், அதனை பேரவைத் தலைவர் தனபால் ஏற்கவில்லை.
திமுக உறுப்பினர்கள் சிலர் எழுந்து அமைச்சர் பேசியது தவறு எனக் குறிப்பிட்டனர். அதற்கு டி.ஜெயக்குமார் இதுதான் திமுக, ஓபிஎஸ் கூட்டணி என்பதுபோல சைகை காட்டினார். அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்து விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



