உச்சி குளிரக் குளிர நாசி கம கமக்க இப்படியும் குளித்துப் பாருங்கள்!

முதலில் சோப் போட்டுக் குளித்து விட்டு கடைசியாக அவரவர் விருப்பத்திற்கேற்ப இந்தக் குளியல் முறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம்.
உச்சி குளிரக் குளிர நாசி கம கமக்க இப்படியும் குளித்துப் பாருங்கள்!
Updated on
3 min read

சிலருக்கு எத்தனை முறை குளித்தாலும் கொஞ்சம் வெயில் ஏறியதும் வியர்க்கத் தொடங்கி உடல் துர்நாற்றம் பற்றிய அச்சம் இருந்து கொண்டே இருக்கும். எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் மனம் அதிலிருந்து தாவி இந்த உடல் துர்நாற்றத்தை எப்படிப்  போக்குவது என்று சதா அதே சிந்தனையாக வேறு இருந்து தொலைக்க வேண்டி வரும். இதெல்லாம் பெர்ப்ஃபியூம் மற்றும் டியோடரண்ட் விளம்பரங்களின் பாதிப்பினால் வரும் ஏதோ ஒருவகை ’போபியா’ என்றெண்ணி சும்மா இருந்து விட முடியாதே! உடலோடு சேர்த்து மனதைச் சமாதானப் படுத்திக் கொள்ள ஏதாவது செய்து தானே ஆக வேண்டும். என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போமா?!

ரோஜாக் குளியல்: 


ரோஜா இதழ்களை உதிர்த்து வெது வெதுப்பான தண்ணீர் நிறைந்த டப் அல்லது வாளியில் சிறிது நேரம் போட்டு வைத்து ரோஜாவின் இனிய மணம் நாசியில் கமழ நமக்குப் பிடித்த ஃபேவரிட் சோப் தேய்த்து கழுவி கடைசியாக இந்த ரோஜாக்குளியலோடு குளியலை நிறைவு செய்யலாம்.

சந்தனக் குளியல்:

டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் சிறு சிறு சந்தன ஸ்டிக்குகள் அல்லது சந்தன தைலத்தை குளிக்கும் தண்ணீரில் கலந்து சிறிது நேரம் கழித்து குளிக்கலாம். மைசூர் சாண்டல் சோப்பை விட இந்த சந்தன மணம் நாள் முழுதும் நீடிக்கும் என்கிறார்கள் இந்த முறையில் குளிப்பவர்கள்.

லெமன் ஃப்ரெஷ் குளியல்:


ஃப்ரெஷ் லெமன் வாங்கி சாற்றைப் பிழிந்து விட்டு வெறும் தோலை மட்டும் நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு குளிக்கும் முன்பு தண்ணீரில் லெமன் தோலைப் போட்டு சிறிது நேரத்தில் அவற்றை எடுத்துப் போட்டு விட்டு குளிக்கலாம். இதனால் சருமத்தின் நிறம் பளிச்சிடுவதுடன் துர்நாற்றமும் அகலும்.

ஆரஞ்சுக் குளியல்:

எப்போதுமே ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டதும் தோலை வீணாக்கி விடாதீர்கள். தோலை நிழலில் காய வைத்து ஒரு பிளாஸ்டிக் ஜாரில் எடுத்து வைத்துக் கொண்டு குளிக்கும் முன்பு தண்ணீரில் ஆரஞ்சுத் தோலை போட்டுக் குளித்து வந்தால் தோல் பள பளப்பதோடு துர்நாற்றமும் அகலும்.

நீம் குளியல்:

தளிர் வேப்பிலை கொஞ்சம் பறித்து வைத்துக் கொண்டு வாரம் மூன்று நாட்கள் என்ற கணக்கில் சோப்புக் குளியல் முடிந்ததும் வேப்பிலைத் தண்ணீரிலும் ஒரு முறை குளித்து விடுவது நல்லது, குறிப்பாக கடும் கோடையில் இந்தக் குளியல் பெரியவர்கள் முதல் சிறுவர் வரை நல்ல பலனளிக்கும். உடலைக் குளிர்விப்பதோடு சரும வியாதிகளையும் தூர நிறுத்தி துர்நாற்றத்தைப் போக்கும்.

யூடிகோலன் குளியல்:


காய்ச்சல் அல்லது உடல் சோர்வான தருணங்களில் நான்கைந்து துளிகள் யூடிகோலனை குளிக்கும் நீரில் கலந்து பிறகு குளித்தால் புத்துணர்வாக இருக்கும்.

பீர்க்கைநார் குளியல்:


இப்போதெல்லாம் பாத் பிரஸ் உபயோகித்து குளிக்கிறார்கள், அதை விட பீர்க்கை நாரால் மென்மையாக உடலை தேய்த்துக் குளிப்பது சருமத்திற்கு நல்லது என்பதோடு தேவையற்ற பின் விளைவுகள் எதையும் அவை ஏற்படுத்துவதில்லை. சந்தையில் பீர்க்கை நார்கள் தாராளமாகக் கிடைக்கும். அவற்றை வாங்கி தண்ணீரில் நனைத்து மென்மையாக்கி உடலைத் தேய்த்து குளிக்கலாம்.

மேற்கண்ட அனைத்து குளியல் முறைகளிலும் முதலில் சோப் போட்டுக் குளித்து விட்டு கடைசியாக அவரவர் விருப்பத்திற்கேற்ப இந்தக் குளியல் முறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம். பிறகு உடல் துர்நாற்றம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com