லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் 31-இல் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 31-ஆம் தேதி பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தொடங்குகிறது.

News image
Updated On :21 மார்ச் 2017, 8:56 pm

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 31-ஆம் தேதி பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தொடங்குகிறது.
திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் திருவாலங்காட்டில் உள்ளது. சிவபெருமானின் 5 நடன சபைகளில் ஒன்றான இக்கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனி உத்திர பிரம்மோற்சவம் மார்ச் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி வரும் 29-ஆம் தேதி, பந்தக்கால் நடப்படுகிறது. 30-ஆம் தேதி இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடைபெறுகிறது. 31-ஆம் தேதி காலை 6 மணிக்கு இடபக் கொடியேற்றமும், இரவு 8 மணிக்கு சிங்க வாகனத்தில் உற்சவர் வீதியுலாவும் நடக்கிறது.
ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 8.45 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபை, 2-ஆம் தேதி காலை 9 மணிக்கு அன்ன வாகனம், இரவு 8 மணிக்கு பூதவாகனம், 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு பல்லக்கு சேவை, இரவு 8 மணிக்கு நாக வாகன சேவை நடக்கிறது.
4-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மகர வாகனம், இரவு 8 மணிக்கு மூஷிக, மயில், ரிஷப வாகனத்திலும், 5-ஆம் தேதி மாலை 3 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு 10 மணிக்கு யானை வாகனத்திலும், 6 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு கமலத் தேரில் உற்சவர் உலா வருகிறார்.
இரவு 9 மணிக்கு கேடய உலாவும், 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கேடய உலாவும், இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், அதிகாலை 4 மணிக்கு குதிரை, யாளி வாகனத்திலும், 8ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கேடய உலாவும், இரவு 10 மணிக்கு அபிஷேகம், விடிய சப்த பதமும், 9-ஆம் தேதி காலை 7 மணிக்கு கேடய உலாவும், மாலை 5 மணிக்கு கேடய உலாவும், 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு சாந்தி அபிஷேகமும், 11 ஆம் தேதி இரவு 10 மணிக்கு புஷ்பநாக ஊஞ்சல் சேவையும், 12ஆம் தேதி இரவு 10 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது பின்னர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே. ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.