அம்மா இருக்க குழந்தை இறந்தது
குழந்தை இருக்க அம்மா இறந்தது !
குழந்தைகளை ஆதரவற்றோர் ஆக்கியது
பெற்றோர்களை குழந்தையற்றோர் ஆக்கியது !
கொடுமைகள் சொல்லில் அடங்காது
கொன்று மகிழ்ந்தது கொடிய சுனாமி !
எதிர்பாராத நேரத்தில் இடியாய் வந்தது
எல்லோரையும் புரட்டிப் போட்டு விட்டது !
கடல்அலை ராட்சத பேரலையாய் வந்தது
கண்டபடி வீசி அடித்துக் கொன்று மகிழ்ந்தது !
தூங்கியவர்களை நிமிடத்தில் பிணமாக்கியது
தூரமாக நின்றவர்களை விரட்டிப் பிடித்தது !
இறுதிச்சடங்கிற்கு சடலம் இல்லாமல் செய்தது
இறந்தவர் பிழைத்தவர் தெரியாமல் போனது !
ஆடிய மனிதர்களின் ஆட்டம் நிறுத்தியது
ஆட்டம் இயற்கையிடம் செல்லாது அறிவித்தது !
பலரது வீடுகள் இல்லாமல் போனது
பலரது உடைமைகள் கடலுக்குள் போனது !
இன்று நினைத்தாலும் அச்சம் பிறக்கும்
என்று நினைத்தாலும் அச்சம் பிறக்கும் !
இயற்கையின் சீற்றம் எப்படி உணர்த்தியது
இயற்கையே பெரிது என்பதைக் காட்டியது !
சுனாமி சுவடுகள் பலரின் வாழ்வில்
சோகம் தந்து வடுக்களாய் நிலைத்தது !
பஞ்ச பூதங்களை சிதைப்பதை நிறுத்து
பஞ்சத்தில் ஆழ்த்திடுவோம் என உணர்த்தியது !
இனி ஒரு சுனாமி வந்தால் இருக்காது உலகம்
இனியாவது இயற்கை நேசிப்பை வழக்கமாக்குவோம் !
மனிதர்கள் மீது மட்டுமல்ல இயற்கையின்
மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்திடுவோம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட இந்தியாவில் கொட்டி தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 18 - நேரலை!

இந்தியத் தேர்தல் இயந்திரத்தின் நம்பகத்தன்மை உலகளவில் நிலைநாட்டப்பட்டுள்ளது: வெளியுறவுத் துறை

உ.பி.யில் ஆய்வுக்குச் சென்ற டி.எஸ்.பி. மீது கடும் தாக்குதல்! 24 பேர் கைது!
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


