மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மனம் எனும்  மாயப்பேய்:  கவிஞர் இரா .இரவி

Updated On :17 அக்டோபர் 2016, 10:35 am
மனம் ஒரு குரங்கு என்பது  முற்றிலும் உண்மை 
மனத்தைக் கட்டுப்படுத்துவது மனிதனின் கடமை !

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதால் 
குரங்கின் குணம் கொஞ்சம் இருப்பது உண்டு !

விலங்கு குணம் மனிதனுக்கு வரும் அதனை 
விவேகமாகச் சிந்தித்து அகற்றிட வேண்டும் !

மனம் இரண்டு வகை உண்டு உணர்ந்திடுக 
மனதில் தேவதை உண்டு சாத்தானும்  உண்டு !

தேவதை நல்லது மட்டுமே சொல்லும் 
தவறாது கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறக்கும் !

சாத்தானின் கெட்டதுக்குச்  செவி சாயத்தால்
சீரழிவிற்கு உடன் வழி  வகுக்கும் !

அடுத்தவரின் உயர்வினைக்   கண்டு 
அந்த தேவதை மனம் மகிழ்ந்து வாழ்த்தும் !

சாத்தானோ பொறாமைத் தீ வளர்க்கும் 
செவி சாய்க்காமல் இருப்பது நலம் !

எண்ணம் போல வாழ்க்கை என்பது 
என்றும் முற்றிலும் உண்மை !

நல்லது எண்ணிட நல்லது நடக்கும் 
அல்லது எண்ணிட அல்லது நடக்கும் !

உதவி செய்யும் உள்ளம் இருந்தால் 
உயர்வு வாழ்க்கையில் தானாக அமையும் !

தனக்காக தன்னல வாழ்வு விடுத்து 
தன்னை நம்பியவர்களுக்காக வாழ்வது சிறப்பு !

என்ன நினைத்தாய் என்று கேட்டால் உடன் 
இன்னது நினைத்தேன் எனச் சொல்லும் !

நினைவு நல்லது எப்போதும் வேண்டும் 
நினைவு செயல் சொல் நல்லது வேண்டும் !

மனதாலும் மற்றவருக்கு தீங்கு நினைக்காது 
மனத்தைச்  செம்மையாக வைத்திருக்க வேண்டும் !

கெட்ட எண்ணங்களை உடன் நீக்கிட வேண்டும் 
நல்ல எண்ணங்களை மட்டுமே வைத்திடல் வேண்டும் !

தான் என்ற அகந்தை ஒருவருக்கு வந்துவிட்டால் 
தள்ளிவிடும் படு பாதாளத்தில் கவனம் வேண்டும் !

மனசாட்சிக்குப் பயந்து வாழ்வதே சிறப்பு 
மனம் ஒரு கோயில் மதித்து வாழ வேண்டும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.