திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

நிலா விடு தூது: கவிஞர் இரா .இரவி

Updated On :27 பிப்ரவரி 2017, 9:56 am

சங்க காலத்தில் இருந்தது நிலா விடு தூது 
சிறப்பான இக்காலத்தில் அலைபேசி விடு தூது !

தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் 
தலைவி நிலாவைத் தூது விட்டாள் அன்று !

அமெரிக்காவில் இருந்துக் கொண்டே இன்று
அலைபேசியில் முகம் பார்த்துப் பேசுகிறாள் !

நிலாவில் நீர் உள்ளது என்று இன்று
நன்றாக ஆராந்து அறிவித்தான் தமிழன் !

நிலாவிற்கு அன்றே ஈரமுண்டு என்றுதான் 
நங்கை அதனை தலைவனுக்குத் தூது விட்டாள்  ! 

நிலவை சாட்சியாக வைத்து காதலித்த 
நீங்காத நினைவுகள் காதலருக்கு உண்டு !

நிலவு பார்த்ததே என்றே பயத்தால்
நின் கரம் பிடித்தேன் என்றவர்கள் உண்டு !

நிலவுக்கும் காதலுக்கும் அன்றும்  என்றும் 
நெருங்கிய தொடர்பு உண்டு !

நிலவு பேசாது தன்னோடு பேசியதாக 
நாளும் கற்பனை செய்பவர்கள்  உண்டு !

நிலா விடு தூது இன்று காதலர்களிடையே 
நின்று விட்டப்  போதிலும் இன்றும் !

நிலாவின் மீதான காதல் காதலர்களுக்கு 
நாளும் இருந்துக் கொண்டே இருக்கின்றது ! 

புதுமண  இணைகள் செல்லும் சுற்றுலாவை
புதுமையாக தேன்நிலவு என்று பெயர் வைத்தனர் !

இனி வருங்காலத்தில் புதுமண  இணைகள்
இனிய நிலாவிற்கே சென்று வரும் காலம் வரும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.