உள்ளத்தில் விடம்கொண்டு உதட்டினில் மதுக்கொண்டு கள்ளத்தனம் கலந்துமொழிந்திடும் மனிதருள்;வெள்ளை மனத்தோடு எள்ளளவும் வன்மமின்றி பிள்ளை நீ சொல்லும் சொல்பேரின்பம் நல்கும் சொல்...இதயத்தில் கனிவன்பும் இதழ்களில் பணிவன்பும் எவர் மனமும் நோகாத இனிமையும் மென்மையும்.. அமுதமே வார்த்தைகளாய் அழகாய் நீ விளம்பும் சொல் அனைவரின் மனங்களையும் அக்கணமே வெல்லும் சொல் பிள்ளை உன் சொல்லாலே உள்ளமும் குளிருதே கல்லதும் கரையுதே கடவுளும் மகிழுதே எல்லையில்லா இன்பம் என்னுள்ளே நிரம்புதே கொள்ளை கொண்டென்மனம் உன் வசம் திரும்புதே குழலோசை சுவைகுன்றும்குயிலோசை செவிவெறுக்கும் உன் குரலோசை அதன்முன்னால் கிளி தோற்றுத் தலை குனியும்அழுகையும் சிரிப்பாகும்பிழைகளும் கவியாகும் குழவி உன்மொழி கேட்டால் -மனக் குறைகளும் மறைந்தோடும்!!!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.