மக்காவ் ஓபன்: காலிறுதியில் சாய்னா, பிரணீத் காஷ்யப் வெளியேற்றம்

மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மக்காவ் ஓபன்: காலிறுதியில் சாய்னா, பிரணீத் காஷ்யப் வெளியேற்றம்

மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அதேநேரத்தில் காஷ்யப் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா 17-21, 21-18, 21-12 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் டினார் தியா ஆஸ்டினை தோற்கடித்தார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் சாய்னா 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். ஆனால் பின்னர் அபாரமாக ஆடிய டினார் 21-17 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்ற, ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
இதன்பிறகு நடைபெற்ற 2-ஆவது செட்டை கடும் போராட்டத்துக்குப் பிறகு கைப்பற்றினார் சாய்னா. பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டில் அசத்தலாக ஆடிய சாய்னா, அந்த செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார். சாய்னா தனது காலிறுதியில் சீனாவின் ஜங் இமானை எதிர்கொள்கிறார்.
ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய் பிரணீத் 21-15, 21-17 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் வாங் விங்கை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் சீனாவின் ஜுன் பெங்கை சந்திக்கிறார் பிரணீத்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காஷ்யப் 13-21, 20-22 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் லின் யூ ஷியெனிடம் தோல்வி கண்டார். ஆடவர் இரட்டையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 20-22, 19-21 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் டேனி பாவா-ஹேந்த்ர விஜயா ஜோடியிடம் தோல்வி கண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com