சென்னையை நெருங்கிறது ‘வர்தா’ புயல்: சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை: 'வர்தா' புயல் சென்னை நோக்கி நெருங்கி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில்
சென்னையை நெருங்கிறது ‘வர்தா’ புயல்: சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை: 'வர்தா' புயல் சென்னை நோக்கி நெருங்கி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக பலத்த மழை, காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை துறை.
வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல்  சென்னை அருகே வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு மற்றும்  வடகிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. நெல்லூரில் இருந்து 490 கிலோ மீட்டர் தொலை விலும், மசூலிப் பட்டினத்தில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதையடுத்து இன்று மாலையில் இருந்து மிதமான மழை பொழியத் தொடங்கி இரவு முன்னேற்றமடைந்து தீவிரமாக வாய்ப்புள்ளதாகவும், காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டரில் இருந்து படிப்படியாக அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடலின் கொந்தளிப்பு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிறுத்தப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு தமிழ்நாடு-தெற்கு ஆந்திரா இடையே சென்னை அருகே நாளை திங்கள்கிழமை பிற்பகல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், ‘வர்தா’  புயலால் 100 கி.மீ வேகத்தில் சென்னையில் காற்று வீசக்கூடும். கடந்த 1994-இல் சென்னையில் 100 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
நாளை ஒருநாள் மட்டும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். ‘வர்தா’ புயல் நாளை சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் மீனவர்கள் அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து பொதுமக்கள் போதுமான குடிநீரை இருப்பு வைத்துக்கைள்ளுமாறும், ரொட்டி, பழங்கள், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை தேவையான அளவு கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு தமிழக வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தாழ்வான, ஏரி, குளம், ஆற்றுப் பகுதிகளி‌ல் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பலத்த புயல் காற்றில் வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மின்கம்பிகள் அறுந்துவிழ வாய்ப்புகள் இருப்பதால்‌, நடந்து செல்வோர் கவனமுடன் செல்லவும், வீடுகளில் உள்ள ஜன்னல் கதவுகளை இருக்கமாக மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வானிலை நிலவரங்கள் குறித்து தொலைக்காட்சி மற்றும் ரேடியோவை கவனித்து தெரிந்துகொள்ளு‌மாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com