உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தேர்தல் : தலைவராக ஜி.மோகன கிருஷ்ணன் தேர்வு

சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவராக ஜி.மோகன கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தேர்தல் : தலைவராக ஜி.மோகன கிருஷ்ணன் தேர்வு
Published on
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவராக ஜி.மோகன கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் (எம்ஹெச்ஏஏ) சங்கத்தில் 4 ஆயிரத்து 838 உறுப்பினர்கள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்தச் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறும்.
தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம், லா அசோசியேஷன் ஆகிய 3 சங்கங்களுக்கும் முறையாக தேர்தல் நடத்த மூத்த வழக்குரைஞர் ஏ.ஏ.செல்லையா தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கெனவே அறிவித்தபடி சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தேர்தல் புதன்கிழமை (நவ.23) நடைபெற்றது. சங்கத் தலைவர் பதவிக்கு எஸ்.அறிவழகன், பி.எம்.துரை சுவாமி, எஸ்.காசிராமலிங்கம், ஜி.மோகனகிருஷ்ணன், எல்.முருகவேலு, கே.சத்யபால், சி.விஜயகுமார் ஆகிய 7 பேர் போட்டியிட்டனர். துணைத் தலைவர் பதவிக்கு ஏ.அப்துல் ரஹ்மான், ஜார்ஜ் சார்லஸ், எம்.ஜெயக்குமார், என்.வி.கோடீஸ்வரன், மதிவாணன், ஏ.மோகன்தாஸ், ஆர்.முரளி, எஸ்.முத்துராமன், பி.வி.எஸ்.பத்மா, பி.எஸ்.என்.பிரபாகரன், எம்.ஏ.ருவா, ஆர்.சுதா, விக்டர் சாமுவேல் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு பி.வி.இளங்கோ, ஆர்.கிருஷ்ண குமார், எஸ்.சசிக்குமார், ஆர்.சிவசங்கர் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு சி.ஆரோக்கியதாஸ், எஸ்.காமராஜ், டி.சிவசண்முகம், கே.சுப்ரமணியன் ஆகியோரும் போட்டியிட்டனர். நூலகர் பதவிக்கு 10 பேரும், முதுநிலை செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 18 பேரும், இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 23 பேரும் போட்டியிட்டனர்.
மொத்தம் உள்ள 16 பதவிகளுக்கு, 79 பேர் போட்டியிட்டனர். பொது தேர்தலைப் போன்று வாக்குப்பதிவு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
உயர்நீதிமன்ற வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை காலை முதல் எண்ணப்பட்டன. பல சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி.மோகன கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இறுதியாக, ஜி.மோகன கிருஷ்ணன் 2,106 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.அறிவழகன் 1,102 வாக்குகளும் பெற்றனர். அதைத் தொடர்ந்து, 1,004 வாக்குகள் வித்தியாசத்தில் ஜி.மோகன கிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேள தாளங்களுடன் வெற்றியை கொண்டாடினர். சங்கத்தின் துணைத் தலைவர் தேர்தலில் சுதா வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com