நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோர் சிறைபிடிப்பு: 10 பேர் கைது
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை, 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகாதப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் மோதினர். இதில் 2 பேர் கடலில் குதித்து மாயமானர்.
படகு மீது மோதியது தொடர்பாக இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. நெடுந்தீவு அருகே மோதலில் ஈடுபட்ட புதுக்கோட்டை, மண்டபம், ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. 10க்கும் மேற்பட்ட படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடுக்கடலில் குதித்து மாயமான 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...