
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரியின் குறுக்கே அணை கண்டிப்பாக கட்டப்படும் என்றும் தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை கூறியிருக்கிறார்.
இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதோடு, தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். அணை கட்டப்பட்டால் விவசாயம் பாதிக்கப்பட்டு, தமிழகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
எனவே, அணை கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இதற்காக தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







