லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய வசதி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இயந்திரம் பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2017, 8:54 pm

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இயந்திரம் பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் 18 -க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் இந்த இயந்திரம் பொருத்தப்பட உள்ளது.
வாக்காளர் வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்தியவுடன், அவர் வாக்களித்த வேட்பாளரின் சின்னம், இயந்திரத்தின் உள்புறத்தில் உள்ள கண்ணாடி வழியே தெரியும்.
ஒரு சீட்டில் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் சின்னத்தை வாக்காளர் பார்க்க முடியும். ஒரு சில நிமிஷங்களுக்கு இந்தச் சீட்டு அப்படியே இயந்திரத்தில் நிற்கும். அதன்பிறகு கீழே சென்றுவிடும்.
இதன்பின், வாக்களிக்க வரும் அடுத்த வாக்காளர் எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தாரோ அந்தச் சின்னம் இயந்திரத்தின் உள்புறத்தில் தெரியும். வாக்காளர் தான் வாக்களித்த வேட்பாளருக்குரிய சின்னத்தை மட்டுமே பார்க்க முடியும். அவருக்கு தனியாக ஒப்புகைச் சீட்டோ அல்லது வேறு சீட்டுகளோ கையில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.