நாடாளுமன்றத்தில் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அதிமுகவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி திடீரென அழைப்பு விடுத்தது.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் கட்சிக் கொறடா விஜயதரணி பேசினார். அப்போது, அதிமுகவுக்கு திடீரென அழைப்பு விடுத்தார். அவர் பேசியது:
மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுள்ள சூட்கேஸுடன் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய நிதியமைச்சர் வந்தார். மூன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பதால் அது கனமாகத்தான் இருக்கும். கடன் சுமையில் இருந்து மாநிலத்தை மீட்டெடுக்க வேண்டிய இடத்தில் தமிழக அரசு உள்ளது. நிதி நிர்வாக பொறுப்புடைமைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிதியை மத்திய அரசு அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக, மத்திய அரசை எதிர்த்துப் போராடுவதில் நாடாளுமன்றத்தில் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்வையுங்கள். நாங்கள் (காங்கிரஸ்) துணை நிற்போம் என்றார் விஜயதரணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிரடி மன்னர்களை ஒரே ஓவரில் விக்கெட் எடுத்த ஷஷாங் சிங்..! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்!
சிம்லாவில் 9.28 கிலோ போதைப் பொருளுடன் 3 நேபாள நாட்டினர் கைது

எந்த இடத்தில் களமிறங்கி விளையாடவும் தயார்: துருவ் ஜுரெல்

”லூசா நீ? எனக்கு ஓட்டுப் போட வேண்டாம்!” கிராம மக்களைத் திட்டிய மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

